ஸ்டாலின் மகள் வீட்டில் ஐடி ரெய்டு – வருமானவரித்துறை கிடுக்குப்பிடி!

நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுகவினர் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் நடத்தபட்ட சோதனையில் கணக்கில் காட்டாத ஏராளமான பணம் சிக்கியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சென்னை நீலாங்கரையில் உள்ள ஸ்டாலின் மகள் செந்தாமரை சபரீசன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் ஸ்டாலின் மருமகன் சபரீசன் நண்பர்கள் வீடுகளிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் ஆணையம் எடுத்து வரும் நடவடிக்கையில் திமுகவைச் சேர்ந்தவர்கள் பலரும் சிக்குவது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version