இலங்கை ராணுவத்தினர் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிகட்ட போரில், இலங்கை ராணுவத்தினர் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அதிபர் ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். இலங்கையில் விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட போரில் அந்நாட்டு ராணுவத்தினரின் தாக்குதலில் 70 ஆயிரம் அப்பாவி பொதுமக்கள் உயிரிழந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இதுகுறித்து ஐ.நா. கண்டனம் தெரிவித்தது. ஆனால், அப்பொழுது அதிபராக இருந்த மகிந்த ராஜபக்சே, இதை மறுத்தார். மனிதாபிமான முறையில்தான் போர் நடைபெற்றதாகவும், ராணுவத்தினரால் பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பத்திரிகை ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், இலங்கைப் போரின்போது ராணுவத்தினர் போர்க் குற்றத்தில் ஈடுபட்டது உண்மைதான் என்று தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளும் போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக தெரிவித்த அவர், தண்டனை வழங்கினால், இரு தரப்பினருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார்.

இலங்கையில், போர்க்குற்றங்கள் நடைபெற்றதாக தொடர் குற்றச்சாட்டு வைக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகள் கழித்து, முதல்முறையாக ராணுவத்தினரின் போர்க்குற்றங்களை ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version