28ம் தேதிமுதல் தமிழகத்தின் தென்கடலோரமாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

ஏப்ரல் 28ம் தேதி முதல் தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்யத் துவங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

கோடைக்காலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இருப்பினும் பல்வேறு இடங்களில் கோடை வெயில் தாக்கத்தை குறைக்கும் வகையில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த 48 மணி நேரத்தில் மத்திய இந்திய பெருங்கடல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த பகுதி, 36 மணி நேரத்தில் வலுப்பெற்று மண்டலமாகவும், பின்னர் புயல் சின்னமாகவும் மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரையை நோக்கி வரும் என்றும் எதிர்பார்க்கப்படுவதால், 28ம் தேதி தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளில் கனமழையும், 29ம் தேதி முதல் உள் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ள வானிலை மையம், ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்றவர்கள் 28ம் தேதிக்குள் கரை திரும்ப வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது. கடந்த 24மணி நேரத்தில் கீரனூரில் 6 சென்டி மீட்டர், வால்பாறையில் 4 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Exit mobile version