இமயமலையில் இருந்தது பனிமனிதனின் கால் தடம் அல்ல என்று நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது.
அண்மையில் இமயமலையில் எட்டி என்னும் பனிமனிதனின் பெரிய கால்தடம் இருந்ததாக இந்திய ராணுவம் தெரிவித்தது. இந்தநிலையில் மகாலு முகாம் அருகே இருந்த அந்த கால்தடம் பனிமனிதனின் கால்தடம் அல்ல என்று நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. மலையேறிய இந்திய ராணுவ வீரர்களுடன் தங்கள் நாட்டு குழுவும் சென்றதாக கூறியிருக்கும் நேபாள ராணுவம், அது கரடிகளின் கால்தடம் தான் என்று குறிப்பிட்டுள்ளது. இதுபோன்ற கால்தடங்கள் அந்த பகுதிகளில் அடிக்கடி தென்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக உலகில் பல்வேறு பகுதிகளிலிருந்து சேகரிக்கப்பட்ட கால் தடங்களை வைத்து பனிமனிதன் உண்மையா என்று அமெரிக்கா நடத்திய ஆய்வுகளிலும் அவை பனிக்கரடிகளின் கால்தடங்கள் தான் என தெரியவந்திருப்பது குறிப்பிடத்தக்கது.