திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்குவது குற்றமாகாது என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவு படுத்தியுள்ளது.
கோயம்புத்தூரில் உள்ள தனியார் தங்கும் விடுதியில், திருமணமாகாத ஆணும் பெண்ணும் தங்கியிருந்ததால் விடுதிக்கு சீல் வைக்கப்பட்டது. இதனை எதிர்த்து விடுதி நிர்வாகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஒரே அறையில் தங்கக் கூடாது என சட்டம் இல்லை என்றும், திருமணமாகாத இருவரும் ஒரே அறையில் தங்குவதில் தவறு இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது. மேலும் திருமணமாகாத ஆணும் பெண்ணும் ‘லிவிங் டு கெதர்” முறையில் சேர்ந்து வாழ்வது எப்படி குற்றமாக கருத முடியாதோ அதேபோல், இருவரும் ஒரே அறையில் தங்குவதும் குற்றமாகாது என்றும் கூறியுள்ளது.