திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் நிரம்பியதால் மூச்சு திணறலுடன் மருத்துவமனைக்கு வரும் கொரோனா நோயாளிகள் அலைக்கழிப்புக்கு ஆளாகின்றனர்.
திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனையில் 200 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ள நிலையில், அவை முழுவதுமாக நிரம்பியதால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். நாளுக்கு நாள் கொரோனா தொற்று விஸ்பரூபம் எடுத்து வரும் நிலையில் உயிரை கையில் பிடித்து கொண்டு ஆக்ஸிஜன் கேட்டு மருத்துவமனை வாயிலில் மக்கள் காத்து கிடக்கும் காட்சிகளை காண முடிகிறது. இந்நிலையில் திருவள்ளூரில் அரசு மருத்துவமனைக்கு வரும் படிப்பறிவு இல்லாத கொரோனா நோயாளிகளை படிவங்களை நிரப்ப சொல்லி அதிகாரிகள் படாத பாடு படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் நோயுடன் போராடுபவர்களும் அவர்களது உறவினர்களும், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றனர்.