கல்கி பகவான் ஆசிரமத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் சோதனை நடத்தி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதையபாளையத்தில் கல்கி பகவான் மகனான கிருஷ்ணாஜி தலைமையில் ஆசிரமம் இயங்கி வருகிறது. அவரது தலைமையில் இயங்கும் அனைத்து ஆசிரமங்களிலும் கடந்த மாதம் 16 ஆம் தேதி முதல் 4 நாட்கள் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் வரதையபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமம் அலுவலகம் மற்றும் ஆலயம் உட்பட 40 இடங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த சோதனையில் 43 கோடியே 90 லட்சம் ரூபாய் உள்பட 2.5 மில்லியன் வெளிநாட்டு கரன்சி, மதிப்பு 5 கோடி மதிப்புள்ள வைரக் கற்கள், 26 கோடி ரூபாய் மதிப்புடைய 88 கிலோ தங்க நகைகள் என மொத்தம் 500 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் வரதையபாளையத்தில் உள்ள கிருஷ்ணாஜி ஆசிரமம் மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் நான்கு குழுக்களாக மீண்டும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.