வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை

தமிழகம் முழுவதும் வி.வி.மினரல்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் 2-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கும், வி.வி. மினரல்ஸ் நிறுவனம் மற்றும் உரிமையாளர் வீடுகளில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை, வல்லான்விளை, கனகப்புரம், ஆத்தூர் கீரைக்கான் தட்டு உள்ளிட்ட இடங்களில் உள்ள விவி மினரல்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் பல்வேறு குழுக்களாகப் பிரிந்து சோதனையிட்டு வருகின்றனர்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்டத்தில் விவி.மினரலுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் வருமானவரி சோதனை நடைபெற்று வருகிறது. கடந்த 3 ஆண்டுகளாக முறையாக வருமான வரி செலுத்தாத காரணத்தால் வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.

Exit mobile version