10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்கள் வெளியீடு

10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு ஒரே தாளாக மாற்றி அமைக்கப்பட்ட தமிழ் மற்றும் ஆங்கில பாடங்களுக்கான மாதிரி வினாத்தாள்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. உரை நடை மற்றும் செய்யுள் ஆகிய இரண்டு தாள்களையும் இணைத்து ஒரே தாளில் 100 மதிப்பெண்கள் வினாக்களாக மாற்றப்பட்டுள்ளது. தமிழ் வினாத்தாளில், 1 மதிப்பெண் வினாக்கள் 14, இரு மதிப்பெண் வினாக்கள் 4, 5 மதிப்பெண் வினாக்கள் 2, 6 மதிப்பெண் வினாக்கள் 3, 4 மதிப்பெண் வினாக்கள் 5, 6 மதிப்பெண் வினாக்கள் 5 என மொத்தம் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றுள்ளன.அதேபோல்,  ஆங்கில பாடத்திற்கும் வினாத்தாள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆங்கில வினாத்தாளில் 100 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றுள்ளன.

Exit mobile version