வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகள் வெளியீடு

வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த நிறுவனங்களுக்கு 3,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்கள் சந்திப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது வங்கிகள் மற்றும் தொழில் துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் வங்கிகளை ஊக்குவிக்க பல்வேறு அறிவிப்புகளை அறிவித்தார். அதில், வங்கிசாரா நிதி நிறுவங்களுக்கு 3,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், வங்கி துறையை வலுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், கூறினார். தற்போது 2.6 ட்ரில்லியன் டாலராக உள்ள இந்திய பொருளாதாரத்தை 5 ட்ரில்லியன் டாலராக  உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். தொழில் தொடங்குவோருக்கு 15 நாட்களில் வங்கி கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுவது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Exit mobile version