காங்கிரசு கட்சியின் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரசு சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் புதுவை உட்பட திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 10 இடங்கள் ஒதுக்கப்பட்டது. அதில் 9 இடங்களுக்கான காங்கிரசு வேட்பாளர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. திருச்சி மக்களவைத் தொகுதியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுகிறார். தேனி மக்களவை தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதியில் வசந்தகுமாரும் போட்டியிடுகின்றனர்.

மேலும் திருவள்ளூர் மக்களவைத் தனி தொகுதியில் டாக்டர். ஜெயகுமார், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் டாக்டர். செல்லக்குமார், ஆரணி மக்களவைத் தொகுதியில் டாக்டர். விஷ்ணு பிரசாத், கரூர் மக்களவைத் தொகுதியில் ஜோதி மணி மற்றும் விருதுநகர் மக்களவைத் தொகுதியில் மாணிக்கம் தாகூரும் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் முன்னாள் சபாநாயகர் வைத்தியலிங்கம் போட்டியிடுவதாக காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version