வாழ்க்கையை மதிப்பெண் தீர்மானிக்காது, மதிப்பெண்ணை எண்ணி மனசோர்வு அடைய கூடாதென மாணவர்களுக்கு இஸ்ரோவின் முதன்மை விஞ்ஞானி சங்கரன் அறிவுரை வழங்கினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில் 64ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் 119 மாணவ, மாணவிகள் பட்டம் பெற்றனர். இஸ்ரோ முதன்மை விஞ்ஞானி சங்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டங்கள் வழங்கினார். அப்போது விழாவில் பேசிய அவர், இந்த கல்லூரியில் தானும் இயற்பியல் பிரிவில் பட்டம் பெற்றுள்ளதாகவும், மாணவ, மாணவிகள் விடாமுயற்சி, தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வாழ்வில் முன்னேற்றம் அடையளாம், மேலும் மதிப்பெண் என்பது வாழ்க்கையை தீர்மானிப்பதில்லை, அது ஒரு அளவுகோல் மட்டுமே என மாணவர்களிடம் அறிவுரை வழங்கினார்