ஊரடங்கால் இஸ்ரோவின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது: இஸ்ரோ தலைவர்!

கொரோனா தொற்று காரணமாக தொழில் நிறுவனங்கள் முழுமையாக செயல்படாததால், இஸ்ரோவின் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக, இஸ்ரோ தலைவர் சிவன் கருத்து தெரிவித்துள்ளார்.

கடந்த ஜனவரி 1ம் தேதியன்று 25 செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணைகளை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களை கடந்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த இஸ்ரோ தலைவர் சிவன், ஊரடங்கு காரணமாக வன்பொருள் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஊரடங்கு இஸ்ரோவின் திட்டங்களை பாதித்திருந்தாலும், சொந்த நடவடிக்கைகளை பாதிக்கவில்லை என்றும் தெரிவித்தார். சுமார் 500 சிறு குறு மற்றும் தொழில் நிறுவனங்கள் விண்வெளி திட்டத்துக்கு பல்வேறு வழிகளில் பங்காற்றுவதாகவும், கொரோனா தொற்று காரணமாக அனைத்தும் முடங்கியுள்ளதாக சிவன் தெரிவித்தார். 2020ம் ஆண்டின் முதல் உள்நாட்டு தாயாரிப்பாக மார்ச் மாதத்தில் ஏவப்பட இருந்த ஜிசாட் -1 திட்டம் ஒத்திவைக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version