ஜிசாட்-7ஏ செயற்கைகோள் வரும் 19-ம் தேதி விண்ணில் செலுத்தப்படும் – இஸ்ரோ

தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த ஜிசாட்-7ஏ செயற்கைகோளை வரும் 19-ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளதாக அறிவித்துள்ளது.

ஜிசாட் 7ஏ செயற்கைகோளானது இந்தியாவின் 35-வது தகவல் தொடர்பு செயற்கை கோளாகும். 2 ஆயிரத்து 250 கிலோ எடைகொண்ட இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி-எப் 11 ராக்கெட் உதவியுடன் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது.

இந்த ஜி.எஸ்.எல்.வி – எப் 11 ராக்கெட் நான்காவது நவீன ராக்கெட் ஆகும். விண்ணில் ஏவப்படும் ஜிசாட் 7ஏ செயற்கைக்கோள் 8 ஆண்டுகள் பூமியை சுற்றி வந்து இந்தியாவுக்கு தொலைத்தொடர்பு வசதியை அளிக்கும் என இஸ்ரோ கூறியுள்ளது. இது சுற்றுவட்டப்பாதையில் நிலைகொள்ள சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version