சந்திரயான்-2ன் உயரத்தை அதிகரிக்கும் பணியை துவக்கியது இஸ்ரோ

புவியின் முதல் சுற்று வட்டப்பாதையில் இருந்து சந்திரயான்-2ன் உயரத்தை அதிகரிக்கும் பணியை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது.

நிலவின் தென் பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா கடந்த 22ம் தேதி செலுத்தியது. நிலவுக்கு அனுப்பப்பட்டு 2 நாட்கள் கழிந்த நிலையில் புவியின் முதல் சுற்று வட்டப்பாதையில் இருந்து விண்கலத்தை உயர்த்தும் பணி தொடங்கியது. அப்போது, விண்கலம் சுமார் 57 நொடிகள் இயக்கி பார்க்கப்பட்டது. இதையடுத்து, சுற்று வட்டப்பாதை தற்போது உயர்த்தப்பட்டுள்ளது.

நாளை மறுநாள் அதிகாலை ஒரு மணிக்கு சந்திராயன்-2 விண்கலம் 2வது சுற்று வட்டப்பாதையில் இருந்து மேலே உயர்த்தப்படும். அப்போது, சந்திரயான்-2 ல் இருந்து விக்ரம் கலம் பிரிந்து தனது ஆய்வு பணியை மேற்கொள்ளும். தொடர்ந்து பிரக்யான் ஆய்வுக்கலமும் தனது ஆய்வு பணியை தொடங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 7ம் தேதி சந்திரயான்- 2 நிலவில் தரையிறங்கும்போது, அதை நேஷனல் ஜியோகிராபிக் நெட்வொர்க் தொலைக்காட்சி நேரடியாக ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளது.

Exit mobile version