நிலவுக்கு மீண்டும் விண்கலம் அனுப்பி லேண்டர் தரையிறக்கப்படும்: இஸ்ரோ தலைவர்

டெல்லி ஐஐடியின் 50-வது பட்டமளிப்பு விழாவில் இஸ்ரோ தலைவர் சிவன் முதன்மை விருந்தினராகக் கலந்துக் கொண்டார். அப்போது ஐஐடி வளாகத்தில் விண்வெளித் தொழில்நுட்பப் பிரிவை அமைப்பதற்கான புரிந்துணர்வு உடன்பாட்டில் இஸ்ரோ சார்பில் சிவனும், ஐஐடி சார்பில் அதன் இயக்குநர் ராம்கோபால் ராவும் கையொப்பமிட்டனர். விழாவில் மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கியபின் சிவன் உரையாற்றினார்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சிவன், சந்திரயான்-2 விண்கலம் நிலவில் இறங்கும் முயற்சி தோல்வியடைந்ததால் அது முடிந்துபோன கதை எனக் கருதி விடக் கூடாது எனத் தெரிவித்தார். மீண்டும் நிலவுக்குச் செயற்கைக் கோளை அனுப்பித் தென்துருவத்தில் லேண்டரைப் பாதுகாப்பாகத் தரையிறக்கும் முயற்சி விரைவில் நடைபெறும் எனத் தெரிவித்தார்.

Exit mobile version