பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை அனுப்ப இஸ்ரோ திட்டம்

பூமி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் வரும் 11-ந் தேதி விண்ணில் ஏவப்படுகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், பூமி கண்காணிப்பு, வானிலை, விமானம், கப்பல் மற்றும் வாகனங்களுக்கு வழிகாட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான செயற்கைக்கோளை தயாரித்து அவற்றை பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி. ரக ராக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்தி வருகிறது.

தற்போது பூமியை கண்காணிப்பதற்காக ராடார் இமேஜிங் சாட்டிலைட் என்று அழைக்கப்படும், செயற்கைகோளை சுமந்தபடி பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. தற்போது எரிபொருள் நிரப்பும் பணி தீவிரமாக நடந்து வரும் நிலையில், கவுண்ட் டவுன், வருகிற 9-ந்தேதி தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version