ஒரே ராக்கெட்டில் 31 செயற்கைக்கோள்களை அனுப்ப இஸ்ரோ திட்டம்

புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் உள்பட 31 செயற்கைக்கோள்களை நாளை மறுநாள் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

வேளாண்மை, வனப்பகுதி, கடலோரப் பகுதி, உள்நாட்டு நீர் நிலைகள், மண்வளம் மற்றும் ராணுவ உளவுப் பணிக்காக, ஹைபர்-ஸ்பெக்ட்ரல் இமேஜிங் என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை இஸ்ரோ உருவாக்கியுள்ளது. செயற்கைக்கோள் விண்ணிலிருந்து, பூமியில் உள்ள பகுதிகளின் எலக்ட்ரோ-மேக்னடிக் அலைக்கற்றைகளில் இருந்து தகவல்களை சேகரித்து அனுப்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள்களுடன், வெளிநாடுகளைச் சேர்ந்த 30 சிறிய மற்றும் நானோ செயற்கைக்கோள்களையும் சேர்த்து பி.எஸ்.எல்.வி சி-43 என்ற, ராக்கெட்டில் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவு தளத்தில் இருந்து நாளை மறுநாள் காலை 9.59 மணிக்கு இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

 

Exit mobile version