சுகன்யான் திட்டத்திற்கான மாதிரி வடிவமைப்பை வெளியிட்டது இஸ்ரோ

இஸ்ரோவின் கனவுத் திட்டமான மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் சுகன்யான் திட்டத்திற்கான மாதிரி வடிவமைப்பு இன்று வெளியிடப்பட்டது.

2021-ம் ஆண்டு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப இஸ்ரோ இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பி.எஸ்.எல்.வி பிரிவு இயக்குநர் ஹட்டன், சுகன்யான் திட்டத்தின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இஸ்ரோவின் கட்டுப்பாட்டு மையத்தில் இதற்கான அலுவலகம் இன்று திறக்கப்பட்டுள்ளது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் திட்டத்தின் மாதிரி வடிவமைப்பும் இன்று வெளியிடப்பட்டது.

Exit mobile version