இந்தியா முழுவதும் திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் மையங்களை அமைத்து மாணவர்களை ஆராய்ச்சி பணிகளில் இஸ்ரோ ஈடுபடுத்த உள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.
சென்னை பசுமைவழி சாலையில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் அவரை சந்தித்து, கஜா புயல் நிவாரணமாக இஸ்ரோ ஊழியர்களால் சேகரிக்கப்பட்ட 14 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் நிதியுதவியை இஸ்ரோ தலைவர் சிவன் வழங்கினார். இதையடுத்து நியூஸ் ஜெ தொலைக்காட்சிக்கு அவர் பிரத்யேகமாக பேட்டியளித்தார்.இந்தியா முழுவதும் 6 மையங்களை தலா 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைத்து மாணவர்களை ஆராய்ச்சி பணியில் ஈடுபடுத்த இஸ்ரோ நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.மாணவர்களுக்காக சோதனை முயற்சியாக கலாம் ஏவுகணை விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். இந்த ஏவுகணை வரும் 24ம் தேதி பிஎஸ்எல்விசி 44 விண்கலத்தில் பயணிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.