பி.எஸ்.எல்.வி சி-46 ராக்கெட் வரும் 22-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் வரும் 22-ம் தேதி காலை 11 மணி அளவில் விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரி-சாட் 2பி என்ற செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி ராக்கெட் விண்ணில் சுமந்து செல்ல உள்ளது. பூமியிலிருந்து 555 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த செயற்கைக்கோள் விண்ணில் நிலை நிறுத்தப்பட உள்ளது. பூமியை இந்த செயற்கைகோள் ஆய்வு செய்யும்.
ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து ஏவப்படும் 72-வது ராக்கெட்டான இது, பி.எஸ்.எல்.வி வரிசையில் 48-வது ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.