இலங்கையில் அண்மையில் ராஜினாமா செய்த இஸ்லாமிய எம்.பி.க்கள் மீண்டும் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்
இலங்கையில் ஈஸ்டர் தினத்தின் போது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் இஸ்லாமிய எம்.பி.க்களும் தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள், மத அமைப்புகள் குற்றம் சாட்டின. இதையடுத்து கபீர் காசீம், எம்.எச்.ஏ. ஹலீம் ஆகியோர் தங்களது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தனர். தற்போது அவர்கள் மீண்டும் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். அதிபர் மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கபீர் காசிம் நெடுஞ்சாலைகள் அபிவிருத்தி, பெட்ரோலிய வள அபிவிருத்தி அமைச்சராகவும், அப்துல் ஹலீம் தபால் சேவைகள் மற்றும்
முஸ்லிம் விவகார அமைச்சராகவும் பதவியேற்று கொண்டனர்.