கொரோனா வைரஸ் தாக்கத்தால் ரசிகர்கள் இன்றி நடத்தப்பட்ட ஐ.எஸ்.எல். இறுதி போட்டி

ஐ.எஸ்.எல் கால்பந்து தொடரின் இறுதி போட்டியில் சென்னை அணியை வீழ்த்திய கொல்கத்தா அணி 3 வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.  10 அணிகள் பங்கேற்ற ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வந்தது. லீக் சுற்றுகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், முதல் 4 இடங்களை பிடித்த கோவா, கொல்கத்தா, பெங்களூரு மற்றும் சென்னை அணிகள் அரையிறுதி போட்டிக்கு முன்னேறின. இதில், சென்னையின் எஃப்சி அணியும், அட்லடிக்கோ கொல்கத்தா அணிகள் இறுதி போட்டிக்கு முன்னேறின. கோவாவில் நடந்த இந்த போட்டியில் இரு அணிகள் பலப்பரீட்சை நடத்தினா. ஆட்டம் தொடங்கிய 10 வது நிமிடத்திலேயே கொல்கத்தா வீரர் ஜாவி முதல் கோலை அடித்து அணிக்கு நம்பிக்கை அளித்தார். அடுத்த 48 வது நிமிடத்தில், அடுத்த கோல் அடிக்க முதல் பாதியில், 2 க்கு 1 என்ற கோல் கணக்கில் கொல்கத்தா முன்னிலை பெற்றது. இதனையடுத்து தொடங்கிய 2 ஆம் பாதியின் 69 வது நிமிடத்தில் சென்னை வீரர் வால்ஸ்கிஸ் கோல் அடித்ததால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version