இந்தியன் சூப்பர்லீக் கால்பந்துப் போட்டியில் "கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தியது பெங்களூரு எப்சி"

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்துப் போட்டியில் கேரளாவை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி பெற்றது. கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் பெங்களுரு அணியின் சுனில் சேத்ரி முதல்கோலை அடித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் கேரளா அணியைச் சேர்ந்த ஸ்லாவியா ஸ்டோஜனோவிக் 30வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இரண்டாவது பாதியில் 80வது நிமிடத்தில் பெங்களூரு வீரர் நிகோலா கிரமரேவிக் கோல் அடித்து அந்த அணியை முன்னிலை பெறச் செய்தார். அதன்பின்னர் இரு அணிகளும் வேறு கோல் அடிக்காததால் 2-1 என்ற கணக்கில் பெங்களுரூ அணி வெற்றி பெற்றது.

Exit mobile version