ஐஎஸ்ஐ அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக வெளியான தகவலை தொடர்ந்து, குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லைப்பகுதி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு பழிவாங்க பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இந்தியாவில் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அனுப்பிய 4 பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக குஜராத் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. பயங்கரவாதிகள் குஜராத் வழியாக ராஜஸ்தான் மாநிலத்திற்குள் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து குஜராத்தில் பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என கருதிய குஜராத் காவல்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ராஜஸ்தான் எல்லைப்பகுதிகள் முழுவதும் காவல்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது. எல்லையில் உள்ள அனைத்து சாலைகளிலும் காவல்துறையினர் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.