படத்தில் ஆடையின்றி நடித்த பிக்பாஸ் பிரபலம்.. ஏன் இப்படி?

பொல்லாத உலகில் பயங்கர கேம் (பப்ஜி) என்ற படத்தில் பிக்பாஸ் பிரபலம் ஐஸ்வர்யா தத்தா நிர்வாணமாக நடித்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்கள் அமைவது என்பது அரிதே. அப்படி அமைந்தாலும் கவர்ச்சிக்காக  பாடலில் வந்து ஆடுவதற்கு மட்டுமே  ஹீரோயின்களை படத்தில் நடிக்க வைத்தனர். ஆனால் காலம் மாற மாற கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக நடை போடுகிறது.

அந்த வகையில் சமீபத்தில் அமலாபால் நடிப்பில் வெளியான ஆடை திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது .அதில் அமலா பால் ஆடை இல்லாமல் படம் முழுவதும் நடித்திருந்தார். ஒரு பக்கம் பாராட்டுகளைப் பெற்றாலும், மறுபக்கம் பல விமர்சனங்கள் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ராஜாவுக்கு செக் திரைப்படத்தில் ஸ்ருஷ்டி நிர்வாணமாக நடித்து இருந்தார்.

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 2 இல் பங்கேற்ற ஐஸ்வர்யா தத்தா பொல்லாத உலகில் பயங்கர கேம் என்ற திரைப்படத்தில்  ஆடையின்றி நடித்துள்ளார்  என்று தகவல் வெளியாகியுள்ளது.மேலும் அந்த காட்சி படத்தின் கதைக்கு அவசியம் என்பதால் அவ்வாறு நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறப்படுகிறது.

Exit mobile version