அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் , மாருதி நிறுவனம் தயாரித்து வரும் கார்களின் விலையை உயர்த்த போவதாக , அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே ஆட்டோமொபைல் துறை கடும் வீழ்ச்சியை சந்தித்து வரும் நிலையில் பல நிறுவனங்கள் தங்களுடைய கார் உற்பத்தியை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தனர். மேலும் பல்வேறு நிறுவனங்கள் தங்களுடைய நிறுவனங்களில் ஆட்குறைப்பு பணியை மேற்கொண்டனர் .
இந்நிலையில் மத்திய அரசு வாகன தயாரிப்பிற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வந்திருக்கிறது. அதிலும் குறிப்பாக அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் விற்பனை செய்யப்படும் அனைத்து வாகனங்களும் ps6 விதிகளை பின்பற்றி தயாரிக்க இருக்க வேண்டும் என்ற விதிமுறையை வகுத்திருக்கிறது. மேலும் காரில் ஏர்பேக், ஏபிஎஸ் போன்ற பாதுகாப்பு வசதிகள் நிச்சயம் இருக்க வேண்டும் என்கின்ற பல கட்டுப்பாடுகள் மத்திய அரசு கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதனால் இனி வரக்கூடிய வாகனங்களின் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் வருகின்ற ஜனவரி முதல் , மாருதி நிறுவனம் தயாரித்து வரும் கார்களின் விலையை உயர்த்த போவதாக அறிவித்திருக்கிறது . பல்வேறு மாடல்களை பொறுத்து விலை மாறுபடும் என்று தெரிகிறது மேலும் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரி மாநில அரசுகளின் சாலை மற்றும் வாகன பதிவு கட்டண உயர்வு ஜிஎஸ்டி போன்ற காரணங்களாலும் கார்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.