வருகிறது உலகின் மிகப் பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகம்

உலகின் மிகப்பெரிய ஸ்டார்பக்ஸ் உணவகமானது சிகாகோவில் வரும் நவம்பர் 15ஆம் தேதி திறக்கப்பட உள்ளது.

உலகெங்கும் பல இடங்களில் உணவகங்களை நடத்தி வரும் ஒரு  நிறுவனமே ’ஸ்டார்பக்ஸ்’ ஆகும். உலகின் 30,000க்கும் அதிகமான இடங்களில் இந்த நிறுவனத்தின் உணவகங்கள் இயங்கி வருகின்றன. ஜப்பானின் டோக்யோவில் உள்ள ஸ்டார்பக்ஸின் உணவகம்தான் இதுவரை அதன் உணவகங்களில் எல்லாம் மிகப் பெரியதாக இருந்து வந்தது. இந்நிலையில் அதைவிடப் பெரியதாக  43 ஆயிரம் சதுர அடி பரப்பளவில், 4 உயர் தளங்கள் கொண்ட ஸ்டார்பக்ஸ் உணவகத்தை  வரும் நவம்பர் 15ஆம் தேதி  அமெரிக்காவின் சிகாகோவில் திறக்க இருப்பதாக ஸ்டார்பக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்டார்பக்ஸ் உணவகங்களை நோக்கி சுற்றுலாப் பயணிகளை அதிகமாக ஈர்க்கும் வகையில் இந்த பிரமாண்ட உணவகம் இருக்கும் என அது நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இந்த உணவகங்களில், மாறுபட்ட  காபி மற்றும் டீ வகைகளை இந்நிறுவனம் வழங்க உள்ளது. இதற்காக உணவகத்தின் வளாகத்திலேயே காஃபிக் கொட்டைகளை வறுக்கும் ரோஸ்டரிகளும், அதன் சேமிப்பகங்களும் அமைக்கப்பட உள்ளன. இவை தவிர வேறுபல வித்தியாசமான உணவு வகைகளும், ஆடம்பர உணவு வகைகளும் இங்கு இடம்பெற உள்ளன.

Exit mobile version