போதுமான தடுப்பூசி டோஸ்கள் கேட்டு பெறுவதில் தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறதா?

தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு தலைவிரித்தாடும் நிலையில், தற்போது வெறும் மூன்றரை லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மட்டுமே மத்திய அரசிடம் இருந்து தமிழக அரசு பெற்றுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி பற்றாக்குறை நிலவுகிறது.

தமிழக அரசின் மெத்தனத்தால், இருப்பில் இருந்த தடுப்பூசி டோஸ்கள் தீர்ந்து, ஐந்தாவது நாளாக நேற்றும் தடுப்பூசி செலுத்தும் பணி நிறுத்தப்பட்டது.

முதல் டோஸ் எடுத்துக்கொண்டு இரண்டாவது டோஸுக்காக காத்திருக்கும் ஏராளமானோர் காத்திருக்கும் நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி கிடைக்காத சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில், மத்திய அரசிடம் இருந்து உரிய தடுப்பூசிகள் பெறுவதில் தமிழக அரசு சுணக்கம் காட்டுவதால், தற்போது வெறும் 3 லட்சத்து 65 ஆயிரம் தடுப்பூசி டோஸ்கள் மட்டுமே பெற முடிந்துள்ளது.

புனேவில் இருந்து விமானம் மூலம் 31 பார்சல்களில் சுமார் 3 லட்சத்து 65 ஆயிரம் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் சென்னை வந்தடைந்தன.

இவை சென்னை DMS வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்தில் இருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இந்த நிலையில், திமுக ஆட்சியில் கோவை மாவட்டம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து, அம்மாவட்டம் உள்பட நோய் பாதிப்பு அதிகமுள்ள மேற்கு மாவட்டங்களில் தடுப்பூசி அதிகளவில் வழங்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

Exit mobile version