வைகோவை பழிவாங்குகிறாரா ஸ்டாலின் ? ? ?

1994 மே 6 … ஸ்டாலின் வளர்ச்சிக்காக திமுகவிலிருந்து பழியோடு வெளியேற்றப்பட்டு, பின் இதை எதிர்த்து தானே ஒரு தனி இயக்கம் தொடங்கினார் ஒருவர்.

வேறுயாருமல்ல. தீவிரவாதத் தடுப்பு சட்டத்தின் கீழ் ( பொடா ) கைது செய்யப்பட்ட முதல் பாராளுமன்ற உறுப்பினரான வை.கோபால்சாமி தான் அது.

எப்படி திமுக தொடங்கும்போது ஒரு கொள்கையுடனும் இப்போது ஒரு கொள்கையுடனும் இருக்கிறதோ, அதேபோலத்தான் தொடங்கும்போது இருந்த நோக்கத்தையே மறந்துவிட்டு மீண்டும் திமுகவுடன் சேர்ந்திருக்கிறார்.

தொடங்கும்போது நல்ல ஆதரவுடன் தொடங்கிய மதிமுக இன்று மதிமுக தொண்டர்களாலேயே புறக்கணிக்கப்படுகிறது.

ஆரம்பத்தில் குடை சின்னத்திலும் பிறகு பம்பரம் சின்னத்தை தனது அதிகாரபூர்வ சின்னமாக தேர்தல் ஆணையத்திடமிருந்து பெற்ற மதிமுக, கடந்த சில தேர்தல்களில் எட்டிய மோசமான முடிவுகளால் தேர்தல் ஆணையத்தின் “அங்கிகரிக்கப்பட்ட கட்சி ” என்ற அங்கீகாரத்தை இழந்தது. அதனால் பம்பர சின்னத்தையும் தக்கவைக்க முடியவில்லை.

இப்போது , 25 ஆண்டுகளுக்கு பிறகு, யாரை பகைத்துக்கொண்டு வெளியேறினாரோ அவரோடு 17 வது மக்களவைத் தேர்தலில் சிரித்துக்கொண்டே கூட்டணிக்கு கைகோத்திருக்கிறார்.

ஆனால், திமுக வுக்கு மதிமுக வை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் மட்டும் குறைந்தபாடில்லை.

ஈரோடு தொகுதியை மதிமுக விற்கு கொடுத்துவிட்டு, உதயசூரியன் சின்னத்தில்தான் போட்டியிட வேண்டுமென நிர்பந்தித்தது திமுக.

ஆனால் தனிசின்னத்தில் போட்டியிடுவோம் என்று சொல்லியிருந்த வைகோ, இப்போது தன் ஈரோடு வேட்பாளர் உதயசூரியனில் போட்டியிட ஒப்புதல் சொல்லியிருக்கிறார்.

காரணம், அதிமுக அங்கு போட்டியிடுவதாலும், வெற்றிச்சின்னமான இரட்டை இலை யை எதிர்த்து தங்களிடம் சின்னம் இல்லை என்பதாலும், வேட்பு மனு திரும்பப்பெற கடைசி நாள் இன்று வரை சின்னம் கிடைக்காததாலும் , உதயசூரியனில் போட்டியிடுவது தான் சரி என்று மதிமுகவினர் கூற, வேட்பாளரும் அதையே விரும்ப, வேறுவழியின்றி உதயசூரியனிலேயே போட்டியிட ஒப்புக்கொண்டார் என்பதுதான்.

இவர் வென்றாலும் மதிமுக எம்.பி அல்ல. திமுக எம்.பி தான். இதில் திமுக பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது. ஆனால் மதிமுகவுக்குத்தான் மன உளைச்சல்.தங்கள் உழைப்பால் வளர்த்த கட்சி தங்கள் கண்முன்னே காணாமல் போனதைக் கண்டு கண்னீர் வடிக்கின்றனர் மதிமுகவினர்.

கொடுப்பது போல கொடுத்து, கொடுத்த ஒன்றையும் எடுத்துவிட்ட ஸ்டாலினின் திட்டம் புரியாமல் தலையைக் கொடுத்திருக்கிறது இந்த ஆடு. அன்று எனக்கெதிராக தொடங்கபட்ட கட்சிதானே என்று மதிமுகவை அழிக்க 25 ஆண்டுகள் கழித்து தன் கூட்டணி கட்சியாக வந்தபின்னும் பழிவாங்குகிறாரா ஸ்டாலின்.?

 

 

Exit mobile version