கருணாநிதி சமாதியில் ஓய்வெடுக்கிறாரா?- ஸ்டாலின் உளறல்

விக்கிரவாண்டி தொகுதியில் பரப்புரையின் போது திமுக தலைவர் ஸ்டாலின் மீண்டும்  உளறி நகைப்பை ஏற்படுத்தியுள்ளார்.

பொதுக்கூட்டம், பிரசாரம் என கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் உளறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். விக்கிரவாண்டி தொகுதியில் பிரசாரம் செய்த போது பேசிய ஸ்டாலின் மீண்டும் உளறி உள்ளார். சங்கீதமங்கலம் என்ற இடத்தில் பேசிய போது, கருணாநிதி சமாதியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார். சிறிது நேரம் கழித்து மீண்டும் கருணாநிதி சமாதியில் உறங்கிக் கொண்டிருக்கிறார் என்றார்.

தமிழகத்தில் ஆட்சியில் இருக்கும் மத்திய அரசு வங்கிக் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வழக்கம்போல தனது உச்சகட்ட உளறலை அவிழ்த்துவிட ஸ்டாலின் பேச்சை கேட்ட மக்கள் சிரித்து மகிழ்ந்தனர். ஸ்டாலினின் பேச்சைக் கேட்டவர்கள் கருணாநிதி ஓய்வெடுக்கிறா அல்லது உறங்குகிறாரா என முணுமுணுத்தவாறே கலைந்து சென்றனர்.

Exit mobile version