ஸ்லீப்பர் செல் கலைராஜன்.. தினகரனின் மாஸ்டர் ப்ளான்.. ஏமாந்த ஸ்டாலின்..

தினகரனின் அமமுக கட்சியில் இருந்து பலர் தங்கள் சொந்த நலனுக்காக கட்சி தாவலில் ஈடுபட்டு கொண்டிருக்க, சத்தமில்லாமல் திமுகவில் நடக்கும் விஷயங்களை தெரிந்து கொள்ள ஸ்லீப்பர் செல்களை அனுப்பி கொண்டிருக்கிறார் தினகரன்.முதலில் அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி, தன் சொந்த நலனை கருத்தில் கொண்டு திமுகவிற்கு தாவினார். அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி விலகியதும்”செந்தில் பாலாஜி நல்ல தம்பிதான். அவர் போனதில் எங்களுக்கு வருத்தமில்லை. அவர் எங்கிருந்தாலும் வாழ்க. எந்தக் கட்சிக்கு செல்வது என முடிவெடுக்க அவரவர்க்கு உரிமை உண்டு” என்று டிடிவி தினகரன் வாழ்த்து சொல்லியிருந்ததை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். எங்கேயும் அளவுக்கு அதிகமாக செந்தில் பாலாஜியை திட்டவில்லை தினகரன்.

அமமுகவில் இருந்து செந்தில் பாலாஜி திமுகவில் சேர்ந்ததும் கரூர் மாவட்ட செயலாளர் பதவி கொடுத்து அழகு பார்த்தது திமுக. கட்சிக்காக ஓடாக உழைத்து தேய்ந்தவர்கள் இருக்க, கட்சி தாவி வந்தவர்களுக்கு பதவியா என திமுக தொண்டர்கள் உள்ளூர பொங்கினார்கள். திமுக என்ன அதிமுக போன்ற தொண்டர்கள் நலன் சார்ந்த கட்சியா ? அதிமுகவில் தான் அடி மட்ட தொண்டர்களுக்கு கட்சி பதவி கொடுத்து அழகு பார்த்தவர் அம்மா.

இந்நிலையில் செந்தில் பாலாஜி மீதான அதிருப்தியே திமுக உறுப்பினர்கள் மத்தியில் முற்றிலும் ஓயவில்லை. அடுத்ததாக அதே சொந்த நலனை முன்னிறுத்தி அமமுக-வின் தென்சென்னை வடக்கு மாவட்ட கழக செயலாளராக இருந்த விபி. கலைராஜன் திமுகவிற்கு தாவி இருக்கிறார். இது தொடர்பாக விபி கலைராஜன், தமிழகத்தில் உள்ள பிரபல மாத இதழ் ஒன்றிற்கு பேட்டி கொடுத்திருக்கிறார். அதில், தனக்கு டி.டி.வி-யோடு தனிப்பட்ட மோதல் எதுவும் இல்லை என்று தெரிவித்து இருக்கிறார். தமிழக மக்கள் மத்தியில் தினகரனுக்கு வரவேற்பு இருக்கிறது. அதை இல்லையென்று மறுக்க முடியாது. அதைக் குறைத்தும் மதிப்பிட முடியாது என்றும் தெரிவித்து இருக்கிறார்.

இறுதியாக இதழின் நிருபர், அ.ம.மு.க-வின் எதிர்காலம் எப்படியிருக்கும்? என்று கேள்வியை முன்வைக்க, அதற்கு பின்வாறு பதிலை கூறியிருக்கிறார் விபி.கலைராஜன்,

“அந்த இயக்கம் நல்லபடியாக வளர வேண்டும் என விரும்புகிறேன். அ.ம.மு.க வளர்ந்தால்தான், அண்ணா தி.மு.க என்ற பெயரில் இப்போது இயங்கும் போலியான கும்பல் சிதறும். மற்றவர்கள் எல்லாம் டி.டி.வி-யின் பின்னால் வருவதற்கான வாய்ப்புகளும் உருவாகும். அந்த அடிப்படையில் அ.ம.மு.க நன்றாக வளர வேண்டும் என விரும்புகிறேன்.’’ என்று பதில் சொல்லி முடித்திருக்கிறார் விபி கலைராஜன்

ஏற்கனவே தினகரன் , தனக்கு ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்கள் என்று கூறி வந்த நிலையில் இந்த பதில்களை எல்லாம் பார்த்தால், திமுகவில் தன்னுடைய ஸ்லீப்பர் செல்களை அனுப்பி திமுகவை வேவு பார்க்கும் வேலையை தினகரன் தொடங்கி இருப்பதாக தொண்டர்கள் கருதுகிறார்கள். வழக்கம் போல சுற்றி இருப்பவர்களின் பேச்சை நம்பி, தொண்டர்களை நம்பாமல் முடிவுகளை எடுக்கும் ஸ்டாலின் இப்போதும் தவறான முடிவை எடுத்திருப்பதாக திமுக தொண்டர்கள் தலையில் அடித்து கொள்கிறார்கள்.

Exit mobile version