தலைதூக்கும் ரவுடிசம் – சாத்தான்குளம் அருகே திமுக பிரமுகரின் அராஜக செயல்

திமுக ஆட்சி வந்தாலே ரவுடியிசம் தலைவிரித்தாடும் என்பதை நிரூபிப்பது போல, தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே நடைபெற்றுள்ள சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாசரேத் அடுத்த உடையார்குளம் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10 ஏக்கர் பரப்பளவில் புதிய சோலார் பவர் பிளாண்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வெள்ளூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் தலைமையில் 10 பேர் கொண்ட கும்பல், அங்கு பணி செய்தவர்களிடம் நிறுவனம் சார்பில் 10 லட்சம் ரூபாய் மாமூல் தரவேண்டும் என்று கேட்டு மிரட்டிச் சென்றுள்ளனர். பின்னர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாமூல் கேட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த ஆடியோ தற்போது வெளியாகியுள்ளது.

Exit mobile version