“அகதிகள்”நாடிவந்தவர் என்பதை விட நாட்டவர் என்று கூறுவோம்.
உலக அகதிகள் தினம் என்று இந்நாளை அனுசரிப்பதே கேள்வி எழுப்ப கூடிய ஒன்றாய் இருக்கிறது. பணம் ஆதிக்கம் செலுத்தும் இந்த நாட்டில் ஏழ்மை உருவாகலாம். அகதிகள் உருவாக காரணம் என்னவோ?
அகதிகள் என்று ஈழத்தமிழர்களை மட்டும் கை நீட்டிக் காட்டுகின்றனர். ஆனால், உலகில் 2.5 கோடிக்கு அதிகமான அகதிகள் சிந்தி கிடக்கின்றன. பசிக்கு பிச்சை எடுப்பதை தவிர்த்து வாழ்வுரிமைக்கு நாடவேண்டிய நிலையில் உள்ளன.
காரணம் என்ன ? என்று தெரியாத புதிராய் இருக்கிறது. மீண்டும், கேட்டு கொள்ளவோம் அகதிகள் உருவாக என்ன காரணம். 2.5 கோடி பேர் குடியுரிமை இன்றி இருக்க காரணம் என்ன? வானில் இருந்து வந்து குதித்த வேற்று கிரக வாசிகளா? நாம் இவர்களை அகதிகள் என்று அழைக்க.
ஐ.நா அறிமுகப்படுத்திய உலக அகதிகள் தினம் ஜூன்20 அனுசரிக்கப்படுகிறது. இதற்கு, கொண்டாடவா முடியும். பதிலுக்கு, அகதிகள் எண்ணிக்கையை குறைத்தால் போதும். உலகில் இலங்கை மட்டுமின்றி பல இடங்களில் பல லட்சம் மக்கள் நாடோடி பிழைப்பை தான் வாழ்கிறார்கள்.
வாழ்வுரிமை, குடியுரிமை, படிப்பு, வேலை என்று எதனையும் தராது இருந்தால் முன்னேற்றத்திற்கு எங்கு வழி. இலங்கை அகதிகள் மட்டுமின்றி சோமாலியா, தென்சூடான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று படித்தாலும் அகதிகளின் கொட்டம் தான். இதில், துருக்கி மட்டும் சற்று வேறு, காரணம் 25லட்சம் அகதிகளை தத்தெடுத்து வாழ்வளிக்கிறது.
இருப்பினும், இதுபோல், அகதி என்று அழைக்க அவர்களுக்கு புதியதொரு வாழ்வளிக்க என்ன தேவை. படைத்ததில், பிடித்ததில் இருந்துவிட்டு போகலாமே. நாடி வரும் அகதிகள் வேண்டுவது பிச்சை இல்லை, வாழ்வுரிமை. தனக்கான அரசானையில் இருக்கும் தனிமனித சுதந்திரம்.
பயணியாய் வந்தவர்கள் கூட 5 ஆண்டுகளின் முடிவில் குடியுரிமை பெறுகிறார்கள். தலைமுறைகள் கடந்தாலும் அகதிகளின் பெயரில் கூட மாற்றம் ஏற்படவில்லை. இரட்டை குடியுரிமை, என்று இரு நாடுகளில் வாழும் வாசிகள் மத்தியில் ஒற்றை குடியுரிமைக்கு நாடி, பிழைப்பதற்கு கடல் தாண்டி, தோட்டக்களுக்கு பலியாகி, கடலுக்கு இரையாகின்றனர்.
அகதிகளை , ஒருநாள் நினைத்து வருந்துவதைவிட வாழ்வுரிமை கொடுத்து, தோள் தட்டி கொடுப்பதை விட கைக்கொடுத்து தூக்குவோம்…