விழுப்புரம் டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திட்டமிடுகறதா திமுக அரசு?

டாக்டர் ஜெ. ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க முயற்சிக்கும் திமுக அரசுக்கும், உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடிக்கும் எதிர்ப்பு வலுத்து வருகிறது

அதிமுக ஆட்சியில் விழுப்புரம் மாவட்டத்தில் கொண்டுவரப்பட்ட டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்க திமுக அரசு முயற்சித்து வருகிறது.

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் வலுத்துவரும் நிலையில், பல்கலைக்கழக பாதுகாப்பு குழு மூலம் விழுப்புரம் மாவட்ட சமுக நல அமைப்புகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு ஒன்றை அளித்துள்ளன.

அதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அரசியலுக்காக டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதை ஏற்க முடியாது என்றும் விமர்சித்துள்ளன.

பல்கலைக்கழகத்தை விழுப்புரத்தில் அமைத்தும் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி மாவட்டத்தை சேர்ந்த மாவட்ட மாணவர்களின் மனிதவள வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் மனுவில் வலியுறுத்தியுள்ளன.

அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் முடக்குவதை கைவிட்டு, டாக்டர் ஜெ.ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை திமுக அரசு மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விழுப்புரம் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Exit mobile version