மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழுமா?

மத்திய பிரதேச மாநில சட்டப்பேரவையில் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என ஆளுநருக்கு பாஜக கடிதம் அனுப்பியுள்ளது

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் காங்கிரசுகு 114 இடங்கள் உள்ளன. பகுஜன் சமாஜ் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் சமாஜ்வாதி சட்டப்பேரவை உறுப்பினர் ஒருவர் ஆதரவுடன் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்துள்ளது. இதுமட்டுமில்லாமல் அங்கு 4 சுயேச்சை உறுப்பினர்களூம் பாஜகவுக்கு 109 உறுப்பினர்களும் உள்ளனர் . இந்நிலையில், காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் கோபால் பார்கவா, ஆளுநர் ஆனந்தி பென்னுக்கு கடிதம் எழுதியுள்ளார். நிதி தொடர்பான விவாதங்கள் நடத்தப்படவேண்டும் என்றும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்துவோம் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேச சட்டசபையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் அதை சந்திக்க தயார் என்று அம்மாநில காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version