ஈரோடு, கொடிவேரி அணையில் இருந்து பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி பாசனப் பகுதிகளுக்குத் தண்ணீர் திறக்க வேண்டும் எனத் தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 80 அடியைத் தாண்டியதும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்ற தமிழக முதல்வர் கொடிவேரி அணையின் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்குத் தண்ணீர் திறக்க உத்தரவிட்டார். இதையடுத்துத் அமைச்சர் செங்கோட்டையன் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினர் ஈஸ்வரன் ஆகியோர் கொடியேரி அணையின் மதகில் இருந்து தண்ணீர் திறந்து விட்டனர். இதனால் கோபிச்செட்டிப்பாளையம், அந்தியூர், பவானி பகுதிகளிலுள்ள 24ஆயிரத்து 504ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். தங்கள் பகுதிக்குத் தண்ணீர் திறந்து விட்டதற்காக விவசாயிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version