ஐஆர்சிடிசியின் பங்குகளை வாங்க 100 மடங்குக்கு அதிகமாக முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
நிதி பற்றாக்குறையை சமாளிக்கும் விதமாக, நடப்பு நிதி ஆண்டில் பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்து, 80 ஆயிரம் கோடி ரூபாய் திரட்ட, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அந்த வகையில், ரயில்வேயின் கீழ் இயங்கி வரும் நிறுவனமான ஐஆர்சிடிசியின் சுமார் 13 சதவீத பங்குகளை விற்று 645 கோடி ரூபாய் திரட்டும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.
ரயில்வே டிக்கெட், ரயில் நீர், கேட்டரிங் போன்ற சேவையில் ஈடுபட்டுள்ள ஐஆர்சிடிசியின் 2 கோடியே 2 லட்சம் பங்குகள் விற்பனைக்கு வந்துள்ளன. இந்தநிலையில், 225 கோடி பங்குகளை வாங்க முதலீட்டாளர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
இதனால் அடுத்த வாரம் பங்குச்சந்தையில், பட்டியலிடப்படும் போது பங்குகள் விலை கணிசமாக உயரும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.