ஈராக்கில் அரசுக்கு எதிராக வெடித்த வன்முறை போராட்டத்தில் 100 பேர் பலியானதை அடுத்து ஐ.நா சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.
ஈராக்கில் வேலையின்மை உள்ளிட்ட பொருளாதார பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில்,அந்நாட்டு மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட பேரணியில் வன்முறை வெடித்ததை அடுத்து, கண்ணீர் புகைகுண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், வன்முறை தீவிரமானதை அடுத்து, காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், போராட்டக்காரர்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் என 100 பேர் உயிரிழந்த நிலையில், சுமார் 4 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்துக்கு ஐ.நா சபை கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐநா வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த சம்பவம் துயரமானது என்றும், வன்முறை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.