ஈரானின் செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வி: அமெரிக்காவிற்கு தொடர்பு இல்லை

ஈரானின் செயற்கைக்கோள் ஏவுதல் முயற்சி தோல்வியடைந்ததில் அமெரிக்காவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். 

கடந்த வியாழயன்று ஈரானின் சஃபிர் 1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கு முன் ராக்கெட் ஏவு தளத்தில், எதிர்பாராத விதமாக, வெடித்து சிதறியது. முன்னதாக,  இதே போன்று இந்த ஆண்டு தொடக்கத்தில் மற்றொரு சஃபிர் செயற்கைக்கோளை ஈரான் ஏவிய போது விதிமுறைகளை மீறியதாக அமெரிக்கா குற்றம் சாற்றியிருந்தது. இந்நிலையில் ஈரானின் சஃபிர் 1பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவுவதற்கு முன் ராக்கெட் ஏவு தளத்தில் வெடித்து சிதறியது.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொன்ல்ட் டிரம்ப், ஈரான் செயற்கைக்கோள் ஏவுதல் தோல்வியடைந்ததில் அமெரிக்காவிற்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும், செயற்கைக்கோளில் ஏற்பட்ட கோளாறை சரி செய்து மீண்டும் செயற்கைக்கோள் ஏவ ஈரானுக்கு தனது வாழ்த்துகளை தெரிவிப்பதாக டுவிட்டரில் டிரம்ப் பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக, அமெரிக்க உளவு செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தையும் டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதில் செயற்கைக்கோள் விண்ணில் ஏவுதற்கு முன் வெடித்து சிதறிய காட்சிகள் இடம் பெற்றுள்ளன. 

Exit mobile version