ஈரானுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை அமெரிக்க கடற்படை சுட்டு வீழ்த்தியாக அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்
வளைகுடா பகுதியில் முகாமிட்டுள்ள அமெரிக்க கடற்படைக் கப்பல்களின் அருகே பறந்ததால் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமாக பெண்டகனும் இந்தத் தகவலை உறுதிபடுத்தியுள்ளது. எனினும் இந்தத் தகவலை ஈரான் மறுத்துள்ளது. தங்களின் விமானங்கள் எதுவும் அமெரிக்காவால் சுட்டு வீழ்த்தப்படவில்லை என்று அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜரிஃப் தெரிவித்துள்ளார். இதனால் வளைகுடா பகுதியில் பதட்டம் அதிகரித்துள்ளது.