ஈரான் அதிபர் ஹசன் ரெளகானி அனைத்து விதமான அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
ஈரான் ரகசியமாக அணு ஆயுதத் தயாரிப்பில் ஈடுபடுவதாக அந்நாட்டுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்க அதிபர் டிரம்ப் ரத்து செய்தார். மேலும் ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளும் விதிக்கப்பட்டன. ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதற்கும் வர்த்தக ரீதியிலான உறவுகளை மேற்கொள்வதற்கும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா தடை விதித்தது. மேலும் ஈரான் ராணுவமான புரட்சிகர பாதுகாப்பு படையை தீவிரவாத இயக்கமாக அமெரிக்கா அறிவித்தது. இதனால் அமெரிக்கா ஈரானிடையே மோதல் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் பொருளாதார தடைகளால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வந்த ஈரான் அனைத்து விதமான அணு ஆயுத சோதனைகளையும் நிறுத்த உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் அதிபரின் இந்த அறிவிப்பு மேற்காசிய பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.