இங்கிலாந்து கப்பல் சிறைபிடிப்பு; கொடியை அகற்றியதால் பதற்றம்

சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த இங்கிலாந்து கொடியை அகற்றிவிட்டு, ஈரானின் கொடி பறக்கவிடப்பட்டுள்ள சம்பவம், இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

ஹோர்முஸ் நீரிணையில் வைத்து பிரிட்டனின் ஸ்டெனோ இம்பெரோ என்ற எண்ணெய் கப்பலை ஈரான் ராணுவம் பறிமுதல் செய்துள்ளது. கப்பலில் இருந்த 23 ஊழியர்களும் ஈரான் வசம் உள்ளனர். இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ள ஈரான், தங்கள் நாட்டு மீன்பிடி படகு மீது பிரிட்டன் கப்பல் மோதியதாகவும், எச்சரிக்கை விடுத்த போதும் நிற்காமல் சென்ற காரணத்தால் சிறை பிடித்ததாகவும், கூறியுள்ளது.

விசாரணை முடியும் வரை, பிரிட்டன் கப்பல் தங்கள் கட்டுப்பாட்டில் தான் இருக்கும் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக, சிறைபிடிக்கப்பட்ட எண்ணெய் கப்பலில் இருந்த இங்கிலாந்து கொடியை அகற்றிவிட்டு, ஈரானின் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.

Exit mobile version