போர்க் கப்பல்களை அனுப்புவது, பகை உணர்வை அதிகரிக்கும்: ஈரான்

வளைகுடா வழியாகச் செல்லும் எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பாக, ஐரோப்பிய போர்க் கப்பல்களை அனுப்ப வேண்டும் என்ற பிரிட்டன் கருத்துக்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தடை செய்யப்பட்ட சிரியா நிறுவனத்துக்கு கச்சா எண்ணெய் ஏற்றிச் சென்றதாக, “கிரேஸ் 1′ என்ற ஈரான் எண்ணெய்க் கப்பலை ஹோர்முஸ் ஜலசந்தியில் பிரிட்டன் சிறைப்பிடித்தது. இந்த நிலையில், தங்களது மீன்பிடிக் கப்பலில் மோதியதாகக் கூறி, அதே ஹோர்முஸ் ஜலசந்தி பகுதியில் பிரிட்டன் எண்ணெய்க் கப்பலான “ஸ்டெனா இம்பெரோ’வை ஈரான் சிறைப்பிடித்தது. இதனால் பிரிட்டனுக்கும், ஈரானுக்கும் இடையே பதற்றம் ஏற்பட்டது.

வளைகுடா வழியாகச் செல்லும் எண்ணெய்க் கப்பல்களை ஈரான் சிறைப்பிடிக்காமல் பாதுகாப்பதற்காக, ஐரோப்பிய நாடுகளின் போர்க் கப்பல்களை அனுப்ப திட்டமிட்டு வருவதாக பிரிட்டன் தெரிவித்தது. இதற்கு ஈரான் அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. ஐரோப்பிய போர்க் கப்பல்களை அனுப்புவது, பகை உணர்வை வெளிப்படுத்தும் செயல் என்றும் பிரிட்டனின் இந்தத் திட்டம் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்யும் என ஈரான் எச்சரித்துள்ளது.

Exit mobile version