சிறைப்பிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது: மத்திய அரசு

ஈரானில் எண்ணெய் கப்பலில் சிறைப்பிடிக்கப்பட்ட 18 இந்தியர்களை விடுவிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

அண்மையில், ஸ்வீடன் நிறுவனத்துக்கு சொந்தமான கப்பல் ஒன்று, பிரிட்டனில் கச்சா எண்ணெயை ஏற்றிக் கொண்டு ஈரானின் ஹோர்மஸ் நீரிணைப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்தக் கப்பலை ஈரான் புரட்சிகர படையினர் சிறைப்பிடித்தனர். சிறைபிடிக்கப்பட்ட அந்தக் கப்பலில் 18 இந்தியர்கள் உட்பட மொத்தம் 24 ஊழியர்கள் இருந்தனர். இதையடுத்து அவர்களை மீட்பதற்காக இங்கிலாந்து மற்றும் ஸ்வீடன் அரசுகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், சிறைப்பிடிக்கப்பட்ட 18 இந்தியர்களையும் பிரிட்டனில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்தித்து பேசினர் என்றும், அவர்களை விடுவிக்க தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்றும், இந்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Exit mobile version