கொரோனா பவுடர் மருந்தின் விலை எவ்வளவு தெரியுமா?

DRDO தயாரித்துள்ள கொரோனா பவுடர் மருந்தின் விலை ஒரு பாக்கெட் 990 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத்துறையின் DRDO மற்றும் டாக்டர் ரெட்டீஸ் மருந்து நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கொரோனா பவுடர் மருந்தான, 2DG மருந்து சில நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில், 2DG மருந்து விலையை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒரு பாக்கெட் பவுடர் 2DG மருந்து 990 ரூபாய்க்கு விற்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் குறைந்த விலையில் இந்த மருந்து கிடைக்கும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா பாதித்த நோயாளிகளுக்கு 2DG பவுடர் மருந்தை கொடுப்பதன் மூலம் நோயின் வீரியம் குறைந்து குணமடைவதாக அண்மையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version