ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்கும் இந்தியா?

அமெரிக்காவின் ஃபைசர் நிறுவனத்தின் தடுப்பூசியை வாங்க மத்திய அரசு நடத்தி வரும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் உலகில் பயன்பாட்டில் உள்ள அனைத்து கொரோனா தடுப்பூசிகளையும் கொள்முதல் செய்ய மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. அதன்படி ஃபைசர் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது.

வெளிநாட்டு தடுப்பூசி என்பதால் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி அளிக்கும் பட்சத்தில் ஏற்படக்கூடிய சாதக பாதகங்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது. உலக சுகாதார நிறுவனம் மற்றும் FDA அனுமதி பெற்ற தடுப்பூசிகளுக்கு விரைந்து அனுமதி வழங்கப்படும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version