ஜெயம் ரவியுடன் இணைந்து நடிக்கும் ஈரானிய நடிகை..

ஜெயம் ரவியின் அடுத்த படமான ‘ஜன கன மன’ படத்தில் அவருக்கு ஜோடியாக ஈரானிய நடிகை நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிக்கும் அனைத்து படங்களும் ஹிட் அடித்து வருகின்றன. சமீபத்தில் வெளியான கோமாளி திரைப்படமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், ரோமியோ ஜூலியட் இயக்குநருடன் இணைந்து ஜெயம் ரவி தனது 25 வது படத்தில் நடித்து வருகிறார்.

இப்படி பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் போதே அவரின் 26வது படத்தில் எல்நாஸ் என்ற ஈரானிய நடிகையுடன் இணைந்து நடிக்கவுள்ளார் என தகவல் கசிந்துள்ளது.இந்த படத்தினை ‘என்றென்றும் புன்னகை’, ‘மனிதன்’ திரைப்படத்தை இயக்கிய அகமது இயக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் நடிகை டாப்சியும் இணைந்துள்ளார்.ஏற்கனவே பல விளம்பர படங்கள், இந்தி சீரியலகளில் நடித்துள்ள எல்நாஸ், தற்போது முதல் முறையாக தமிழில் நடிக்கவுள்ளார்.

Exit mobile version