அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்

ஈராக்கில் உள்ள அமெரிக்க படைகள் மீது ஈரான் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரானின் 2-வது சக்தி வாய்ந்த நபராக கருதப்பட்ட ராணுவ தளபதி குவாசிம் சுலைமானி, அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டார். இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர் மூளும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.  சுலைமானி கொலைக்கு காரணமான அமெரிக்க ராணுவத்தை பயங்கரவாத இயக்கமாக ஈரான் அறிவித்துள்ளது. இந்த நிலையில், ஈராக்கின் அல் அசாத் பகுதியில் உள்ள அமெரிக்க மற்றும் அதன் கூட்டணி படைகளின் ராணுவ தளம் மீது, ஈரான் 10-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அமெரிக்காவுக்கு பதிலடியாக ஈரானும் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதால்,  மத்திய கிழக்கு நாடுகளில் உச்ச கட்ட பதற்றம் நிலவுகிறது. இதன் காரணமாக கச்சா எண்ணய் விலை 3.5 சதவீதம் உயர்ந்துள்ளது. ஈரானின் ஏவுகணை தாக்குதலை உறுதி செய்துள்ள அமெரிக்கா, அதன் மூலம் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து ஆய்வு செய்து வருவதாக தெரிவித்துள்ளது.

Exit mobile version