ஈரானில் உடைக்க்ட்டுப்பாடு விதியை மீறியதாக ஒரு பெண்ணை காவல்துறையினர் தாக்கி உயிரிழக்க வைத்த சம்பவம் அனைவரும் அறிந்ததுதான். இது நடைபெற்று மூன்று மாதங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களும் அந்த நாட்டுப்பெண்கள் செய்து வருகிறார்கள். இதனால் அந்நாட்டு அரசு பல அடக்குமுறைகளை போராட்டக்காரர்கள் மீது நிகழ்த்தி வருகிறது. ஹிஜாப் அணிவதற்கு எதிரான போராட்டம் அவ்ங்கு வலுத்துவந்தாலும், பெண்களுக்கு சாதகமான சட்டத்தை அந்நாட்டு அரசு வழங்க முன்வர மறுக்கிறது. இந்தப் போராட்டத்தில் கிட்டத்தட்ட 300 பெண்கள் இறந்துள்ளனர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டு வந்துள்ளனர். போராட்டக்காரர்களுக்கு தூக்குத் தண்டனை போன்றவையும் விதிக்கப்பட்டுள்ளது. எத்தனை நபர்கள் இறந்துள்ளனர் என்பது பற்றினப் புள்ளி விவரங்கள் சரிவர தெரியவில்லை.
தற்போது ஈரானில் பள்ளிக்குச் செல்லும் மாணவிகளுக்கு திடீர் காய்ச்சல், தலைவலி, வயிற்று வலி, வாந்தியெடுத்தல் போன்ற உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டிருக்கிறது. மூச்சு விடுவதிலும் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனையில் அவர்கள் உண்ணும் உணவில் விஷம் கலந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கு பிண்ணனியில் அந்நாட்டு மதவாதிகள் உள்ளது தெரிய வந்துள்ளது. ஈரானின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சகம் இந்தப் புள்ளி விவரங்களை வெளியிட்டு, மதவாதிகளுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.